பாமணியில் இயங்கி வரும் பழமையான உரத்தொழிற்சாலையில் அமைச்சர் பெரியகருப்பன் திடீர் ஆய்வு..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பாமணியில் இயங்கி வரும் பழமையான உரத்தொழிற்சாலையை கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் பெரிய கருப்பன் கூறியதாவது : பாமணி உரதொழிற்சாலையில் விவசாயத்திற்கு தேவையான தரமான இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது .
இந்த உரங்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த ஆலையில் ரூ 1 கோடி மதிப்பில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கோரிக்கையை ஏற்று இந்த ஆலையில் சிங்சல்பேட் தயாரிக்கும் பிரிவு சுமார் 5 கோடி மதிப்பிலும், மண் புழு உரம் தயாரிக்கும் சிறப்பு கூடம் ரூ 1.40 கோடி மதிப் பிலும் அமைக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன், மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ, பூண்டி கலைவாணன் எம் எல்ஏ, நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், ஒன்றிய திமுக செயலாளர் சித் தேரி சிவா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்