அரசியல்தமிழ்நாடு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் துடித்ததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

In mid-night action, ED arrests TN Power Minister Senthil Balaji, takes him  to hospital after he complains of chest pain - The South First

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில் இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது :

அமலாக்கத்துறை தனது கடமையை சுதந்திரமாக செய்து வருகிறது. மொரிசீயஸ் உட்பட வெளிநாடுகளுக்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.