நேசக்கரம் அமைப்புக்கு தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருது..!
சூழலியல் செயல்பாட்டில் நீர்நிலைகள் பாதுகாப்பு, ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து குளத்தை மீட்டது, ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசு ரூ. 1 லட்சத்துடன் கூடிய பசுமை சாம்பியன் விருதினை நேசக்கரம் அமைப்புக்கு வழங்கி உள்ளது.
இந்த விருதை, மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் .ப.சிதம்பரம், கோட்டாட்சியர் சங்கீதா, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அருண் மற்றும் அலுவலர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நல்ல செயல்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற விருதுகளை வழங்கி செயல்பாட்டாளர்களையும், அவர்களை ஒருங்கிணைத்து செயல்படுகின்ற அமைப்புகளையும் கௌரவித்து வருகின்ற தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நேசக்கரம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .