மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு..!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் படி முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12 முதல் 16 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20 முதல் 24 வரையும் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. டி20 போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி டெஸ்ட் போட்டிகள் இரவு 7.30 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் இரவு 7 மணிக்கும், 20 ஓவர் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (விசி), கேஎஸ் பாரத் (வி.கே), இஷான் கிஷன் (வி.கே.), ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி உள்ளிட்டோர் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் , இஷான் கிஷன் , ஹர்திக் பாண்டியா , ஷர்துல் தாக்கூர், ஆர்.ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் உள்ளிட்டோர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.