இந்தியா

முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் சீரானது..!

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இருந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏதுவாக இந்திய ரயில்வே துறை சார்பில் ஐ ஆர் சி டி சி இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளம் மூலம் பயணிகள் எளிதில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மடிக்கணினிகள் வாயிலாகவும், செல்போன் ஆப்புகள் மூலமாகவும் இந்த இணையதளத்தில் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துகொள்ளலாம்.

இந்த வசதி ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளுக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்கிறது. இந்த நிலையில், இன்று திடீரென ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர்.

இணையம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஐ ஆர் சி டி சி இணையதளம் முடங்கியது. இதனால் அமேசான் மற்றும் மேக் மை ட்ரிப் செயலிகள் மூலமாக பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம எனவும், தொழில்நுட்ப கோளாறுகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இருந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பயணிகள் மீண்டும் ரயில் டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்.