அரசியல்தமிழ்நாடு

மக்களை சந்தித்து பதவிக்கு வந்தேன்: உங்கள் மகன் எப்படி பதவிக்கு வந்தார்? அமித்ஷாவுக்கு உதயநிதி கிடுக்குப்பிடி கேள்வி

தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

Image

திமுகவினர் புடைசூழ நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் உழைக்கிறார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா ராமேசுவரத்தில் பேசியதற்கு தக்க பதிலடி கொடுத்தார்.

Image

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது:- ராமேசுவரத்துக்கு வந்த அமித்ஷா என்னைப் பற்றி பேசி இருக்கிறார். என்னை முதலமைச்சர் ஆக்குவதுதான் முதலமைச்சர் லட்சியமாம்.

Udhayanidhi Stalin Vs Amit Shah: 'നിങ്ങളുടെ മകന്‍ എത്ര റണ്‍സ് നേടി?'; അമിത്  ഷായ്‌ക്കെതിരെ ഉദയനിധി സ്റ്റാലിന്‍ - Tamil Nadu minister Udhayanidhi Stalin  against Amit Shah jai shah bcci secretary ...

நான் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த பதவிக்கு வந்திருக்கிறேன். நான் அமித்ஷாவை கேட்கிறேன். உங்கள் மகன் ஜெய்ஷா கிரிக்கெட் சங்க தலைவர் ஆகியிருக்கிறாரே, அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? நான் ஏதாவது கேட்டேனா?

ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2014-ல் வெறும் ரூ.74 லட்சம் தான். இப்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி. இது எப்படி வந்தது? இந்த திடீர் வளர்ச்சி எப்படி வந்தது? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் .