ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் : அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வந்த அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், உலோகங்கள், தானியங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட இருக்கும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ASI பொது இயக்குனர் கிஷோர் குமார் பாஷா, ASI இணை பொது இயக்குனர் மஞ்சூல், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்திய தொல்லியல்துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.