“20 ஆண்டுக்கு மேலாக இருந்த வெறுப்பு” – ‘மாமன்னன்’ 50வது நாள் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு
தமிழ் புரட்சிகர இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மாமன்னன் படம் கடந்த ஜுன் 29 ஆம் தேதி வெளியானது .
ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய இப்படம் ஓடிடியிலும் தற்போது சாதனை படைத்து வருகிறது .
இந்நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாமன்னன் படத்தின் 50வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்று 20 ஆண்டுக்கு மேலாக இருந்த ஆதங்கம்தான் மாமன்னன் கதை. ஆனால் என்னுடைய இசையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் இவர்களோடு சேர்ந்து கொண்டேன் என்று தெரிவித்தார் .