சினிமா

வசூல் வேட்டை நடத்தும் ஷாரூக்கின் ஜவான்..! படக்குழு சொன்ன டக்கர் தகவல்

ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் பேசிக்கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் இரண்டு நாட்களில் 240.47 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வசூல் அதிகரித்து இருக்கிறது.

மூன்று நாட்கள் முடிவில் ஜவான் படம் 384.69 கோடி வசூலித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டுமே 144.22 கோடி வசூல் வந்திருக்கிறது.

இதில் ஹிந்தி ஜவான் 68.72 கோடி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.