சினிமா

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்..? லேட்டஸ்ட் தகவல்..

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நா அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக அவர் வெளிநாடு சென்றார்.

பின்னர், சென்னை திரும்பிய ஜேசன், நடிப்பில் ஈடுபாடில்லை என்று கூறி இயக்குநராக விரும்புவதாக கூறினார். தொடர்ந்து ஒரு சில குறும்படங்களையும் அவர் இயக்கினார். இதைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் புதிய படம் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

It's official: Vijay's son Jason Sanjay to make his directorial debut |  Tamil Movie News - Times of India

இதன் மூலம், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகம் ஆகிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தொடக்கத்தில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசை அமைப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அனிருத் இசை அமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்க்கெட்டிற்காக பிரபல இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.