அரசியல்தமிழ்நாடு

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன் – அண்ணாமலை

இந்தியாவின் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் உயிரிழந்தார். அவருக்கு வயது 98. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்த இவர், இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர்.

வேளாண்மைத் துறையில் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்பு என்ன? - Quora

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக 1972 முதல் 1979 வரை இருந்தார். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவராக 1982 முதல் 1988 வரை பதவி வகித்தார். பத்மபூஷன், எஸ்எஸ் பட்நாகர் உள்ளிட்ட விருதுகளையும் எம்.எஸ். சுவாமிநாதன் பெற்றுள்ளார். இந்திய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கௌரவ டாக்டர் பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமைக்குரியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றவருமான பத்மபூஷன் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.