விளையாட்டு

தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக மகளிர் அணிக்கு ஊக்க தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி

ஒடிசாவில் அண்மையில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு அணியின் வீராங்கனைகளை இன்று குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் .

Image

இதையடுத்து தமிழ்நாட்டு அணியில் இடம்பெற்றிருந்த 22 வீராங்கனையரையும் ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறை சார்பில், தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.22 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி வழங்கினார் .

Image