குற்றம்தமிழ்நாடு

திருச்சியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ உள்பட 4 போலீசார் மீது வழக்குப்பதிவு..!

திருச்சியில் 17 வயது சிறுமி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் எஸ்.ஐ உள்பட 4 போலீசார் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கண்ணாங்குடியை சேர்ந்த இளைஞரும், துவாக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் வார விடுமுறை மகிழ்ச்சியுடன் கழிக்க இந்த காதல் ஜோடி சுற்றுலா தலங்களில் ஒன்றான திருச்சி முக்கொம்பு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கே அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது எதிர் பகுதியில் திருச்சி மாவட்டம் தனிப்படையை சேர்ந்த ஜீயபுரம் காவல்நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் சசிக்குமார், தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் உள்ள சங்கர்ராஜபாண்டி, நவல்பட்டு காவல்நிலைய காவலர் பிரசாத், ஜீயபுரம் காவல்நிலைய போலீசார் சித்தார்த் ஆகிய நான்கு பேர் அங்கு மது அருந்தி கொண்டிருந்தனர்.

Rape of a 17 year old girl | 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

இந்நிலையில், அந்தப் பகுதியில் வந்த காதல் ஜோடிகளிடம் முதலில் தகராறு செய்துள்ளனர். பின்பு, உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பெண்ணோடு வந்த ஆண் நண்பரை பார்த்து போதைப் பொருள் எதுவும் வைத்து இருக்கிறாயா? என்று கேட்டு மிரட்டி துரத்தி அனுப்பி விட்டு அந்த 17 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்து வந்து காருக்குள் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேரம் அந்த சிறுமி கதறி உள்ளார்.

திரைப்படத்தில் வருவது போல் சிறுமி தப்பித்து ஓடியும், மீண்டும் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளி உள்ளே பாலியல் சீண்டலில் 4 பேரும் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை விசாரித்த போலீசார் சம்பவம் நடந்தது உண்மை என்பதை உணர்ந்த பிறகு, சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் முசிறி மற்றும் திருவெறும்பூர் காவல் சரகத்தை சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே, இந்த தகவல் குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கையை எடுத்து, உடனே அறிக்கையை சமர்ப்பிக்கவும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் விசாரணை தீவிர படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், சசிக்குமார் – உதவி ஆய்வாளர் ஜீயபுரம் 2.பிரசாந்த் – (நவல்பட்டு காவல்நிலையம்), 3.சங்கர் ராஜபாண்டி (திருவரம்பூர் காவல்நிலையம்), 4. சித்தார்த் – ஜீயபுரம் காவல் நிலையம் ஆகிய நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி பகலவன் உத்தரவு பிறப்பித்தார்.