உலகம்

அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூடு – 22 பேர் பலி

அமெரிக்காவின் லூயிஸ்டனில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர். லீவிங்ஸ்டன் நகரில் மர்மநபர் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் மைனே, லெவிஸ்டன் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர், கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்தனர் என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. துப்பாக்கிசூடு நடத்திய நபரின் இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. துப்பாக்கி ஏந்திய ஒருவர் வெறித்தனமாக நடந்து கொண்டிருப்பதைக் அறிந்து அப்பகுதிவாசிகள் , பல வணிக நிறுவனங்கள் உடனடியாக பூட்டப்பட்டன.