தூத்துக்குடியில் இயங்கி வரும் ஓலைப்புட்டு உணவகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாடினார் கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் சுயமாக தொழில் செய்து முன்னேறிடும் வகையில் கடந்த வருடம் “ஓலைப்புட்டு – இலங்கை பாரம்பரிய உணவகம்” தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களின் ஏற்பாட்டில் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது.

கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த உணவகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று (26/10/2023) வியாழக்கிழமை, ஓலைப்புட்டு உணவகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு உரையாற்றி, உணவகத்தை நடத்தி வரும் பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி

இந்நிகழ்வில் உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்