சினிமா

ராகவா லாரன்சை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் காலமானார்..!!

நடிகர் ராகவா லாரன்சை அற்புதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதல் காலமானார். அவருக்கு வயது 52.

நடிகராக வேண்டும் என ராகவா லாரன்ஸ் விரும்பியதை அறிந்த இயக்குநர் அற்புதன், 2002ம் ஆண்டு அற்புதம் என்ற படத்தில் அவரை நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஆனால், அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் கை கொடுக்கவில்லை. அதன்பின் பேய் படங்களை காமெடியாக்கி நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்சை அற்புதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதல் காலமானார். அவருக்கு வயது 52. சாலை விபத்தில் காயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். மனதோடு மழைக்காலம், செப்பவே சிறுகாளி ஆகிய படங்களையும் அற்புதன் இயக்கியுள்ளார்.