இந்தியா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.சி.ஆரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு..!!

மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆரை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆருக்கு ஐதராபாத் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தற்போது தொடர் ருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத் சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு சென்றுள்ளார் . பின்னர் கேசிஆரின் உடல்நிலை குறித்து சந்திரபாபு கேசிஆரிடம் கேட்டறிந்தார். இதையடுத்து டாக்டர்களிடம் கேசிஆருக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து விவரங்களை பெற்றார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது :

“விரைவில் கேசிஆர் குணமடைவார். கேசிஆர் விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். டாக்டர்கள் கூறியுள்ள தகவலின்படி,கேசிஆர் எந்த பிரச்சனையும் இல்லாமல் பழையபடி சாதாரணமாக சுற்றி வர வாய்ப்புகள் இருக்கிறது. கேசிஆர் விரைவில் குணமடைந்து மீண்டும் அர்ப்பணிப்புடன் மக்களுக்காக உழைக்க வேண்டும்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.