Covid19இந்தியா

அதிகரிக்கும் கொரோனா பரவல் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!!

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கேரளாவில் கந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் பரவி வரும் உருமாறிய கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவில் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்ந்லையில் கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் RT-PCR பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.