சினிமா

உலக அரங்கில் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ – உற்சாகத்தில் சினிமா ரசிகர்கள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ‘53வது-ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிட தயாராகியுள்ளது. இந்த தகவல் படக்குழு மற்றும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்களான ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் புகழ் வாய்ந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவின் கீழ் திரையிடப்பட உள்ளதாக IFFR அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேப்போல பிக் ஸ்க்ரீன் போட்டி பிரிவில் இயக்குநர் ராமின் ‘எழு கடல் ஏழு மலை’ படம் தேர்வாகியுள்ளது. வெற்றிமாறனின் விடுதலை பாகம்1 படமும் தேவாகியுள்ளது. கூடுதலாக விடுதலை பாகம்2 இதில் ப்ரீமியர் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.