அரசியல்இந்தியா

டெல்லியில் பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு..!!

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார். அப்போது கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் சந்திப்பு நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது.