தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரிய தலைவராக தஞ்சை ஜீவா நியமனம்..!!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரிய தலைவராக, தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தஞ்சை ஜீவா அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறிருப்பதாவது :

2020-21-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடரின்போது மாண்புமிகு அமைச்சர் (தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்:-

கேபிள் டிவி தொழிலாளர்கள் நல வாரியம் என்பது தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம் எனப் பெயர் மாற்றம் செய்து அமைக்கப்படும்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் அனுப்பியுள்ள கருத்துருவில், “கம்பிவடத் தொலைக்காட்சித் தொழிலாளர்கள் நலவாரியம்” என்பதனை “தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியம்” எனப் பெயர் மாற்றம் செய்யவும், வாரியத்திற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யவும்,
வாரியத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உரிய ஆணை வெளியிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்காணும், கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனை ஏற்கலாம் என முடிவு செய்து, கம்பிவடத் தொலைக்காட்சித் தொழிலாளர்கள் நலவாரியம் என்பதனைத் “தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியம்” எனப் பெயர் மாற்றி அமைத்தும், தலைவர் மற்றும் அலுவல்சார் அலுவல்சாரா உறுப்பினர்களை நியமித்தும், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தும், இதன்மூலம் ஆணையிடுகிறது. இந்நலவாரியம் கீழ்க்காணும் அலுவல்சார்ந்த அலுவல்சார்ந்த அலுவல்சாரா உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்