அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் , உலக அமைதிக்காக சிறப்பு யாகம்..!!
இராமாயண போரில் லக்மணணின் உயிரைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வரும் வழியில் அனுமனுக்கு தண்ணீர் வேண்டி முருகப்பெருமானை தியானித்தார்.
முருகப்பெருமான் தனது வேலால் கோவை பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ள அனுவாவி மலைப்பகுதியில் இருந்து தீர்த்தம் உண்டாக்கி அனுமனின் தாகம் தீர்த்து கருணை புரிந்தார். அனுமனுக்காக அருளியதால் அனுமந்த தீர்த்தம் என்றும் முருகப்பெருமான் அனுமக் குமரன் எனவும் போற்றி வழிபட்டு வருகின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அருள்மிகு அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அயோத்தியில் ராமர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அருள்மிகு அனுவாவி ஆஞ்சநேயர் சன்னதியில் பக்தர்களின் நலன் கருதியும் , உலக அமைதிக் காகவும் சிறப்பு யாகங்கள், அபிஷேகம், நடைபெற உள்ளது .
பரம்பரை அறங்காவலர் நா. ராம்குமார் கவுண்டர் முன்னிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் Dr. செந்தில்நாதன் . ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற உள்ளது.