அரசியல்தமிழ்நாடு

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இணைப்புகளை உயர்த்துவது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்..!!

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இணைப்புகளை உயர்த்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இன்று (16.02.2024) தலைமை செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மாவட்ட துணை மேலாளர்கள் / வட்டாட்சியர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுடன் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இணைப்புகளை உயர்த்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் அ.ஜான் லூயிஸ்,தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தொழிலாளர் நலவாரிய தலைவர் ஜோ.ஜீவா மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.