அரசியல்இந்தியா

பிரதமர் மோடி சென்னை வருகை – டிரோன்கள் பறக்க தடை

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சென்னை வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நாளை (04.03.2024) சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை தருகிறார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கு.வி.மு.ச. பிரிவு 144ன் கீழ், சென்னை பெருநகரில் 01.03.2024 மற்றும் 29.04.2024 வரை டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி விமானங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றனர்.