இந்தியா

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி..!!!

பாதுகாப்பு படைகளுக்கு தேவையான ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.

இந்நிலையில் 2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் அக்னி பிரைம் என்ற புதிய தலைமுறை ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இதன் பரிசோதனை ஒடிசா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையை முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், அணு ஆயுதப் பிரிவு அதிகாரிகள் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பல இடங்களில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் அக்னி பிரைம் ஏவுகணையின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. ஏவுகணை வெற்றிகரமாக பறந்து சென்று இலக்கை தாக்கியது.