அரசியல்தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பனின் புகழும் நிலைத்திருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்.ஜி.ஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்;

அவரது 98வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி நேரில் அவரது இல்லத்திற்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன.

ஆர்.எம்.வீரப்பன் மறைவு அரசியலில் மட்டுமின்றி திரை, இலக்கிய, ஆன்மீகத் துறைகளுக்கும் பேரிழப்பு அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தவர் ஆர்.எம்.வீரப்பன்

திராவிட இயக்கம் உள்ளவரை ஆர்.எம். வீரப்பனின் புகழ் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.