அரசியல்தமிழ்நாடு

தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? – முதல்வர் ஸ்டாலின் விளாசல்

பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :

எந்த திட்டங்களையோ, உதவியோ செய்யாத பிரதமர் எந்த முகத்தோடு தமிழ்நாடு வந்துள்ளார்?
பெண்கள் பாதிக்கப்படும்போது வேடிக்கை பார்த்தவர் பிரதமர் மோடி; மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது பிரதமர் மோடி என்ன செய்தார் .

மக்களை பிளவுப்படுத்தும் மதவாதத்திற்கு தான் நாங்கள் எதிரிகளே தவிர மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல; நான் அதிகம் கலந்து கொண்ட அரசு விழா இந்து சமய அறநிலையத்துறையின் விழாக்கள்தான் அரசு பொறுப்பேற்று 1,069 நாட்களில் 1,556 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம்.

தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் ஏன் இத்தனை வன்மம்? என பிரதமர் மோடியின் வருகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார் .