அரசியல்தமிழ்நாடு

புதிய அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஷால்

நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், புதிய கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாகவும், சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் தன் பெயரும் இருக்கும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, 2026 தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து விஷாலும் கட்சி தொடங்க உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.