சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தில் இருந்து வந்த செம அப்டேட்..!
தமிழ் சினிமாவில் மெரினா, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, டான் என இந்த 10 வருடங்களில் ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் பல தடைகளை கடந்து பல புதிய முயற்சிகள் செய்து தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வானோக்கி உயர்ந்து நிற்கிறார் .
மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக வாழ்வை ஆரம்பித்து தற்போது நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என ஒவ்வொன்றிலும் அவரது முத்திரையை பதித்து வருகிறார் நம்ப வீடு பிள்ளை சிவகார்த்திகேயன் .
இந்நிலையில் இன்று நேற்று நாளை என்ற டைம் மெஷின் கான்செப்ட் ஐ வைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அறிமுக இயக்குனர் ரவி . அந்த படத்துக்கு பிறகு இவர் இயக்கத்தில் சிவா, இஷா கோபிகர் நடித்து வரும் படம் தான் அயலான். உலகம் போற்றும் இசை புயல் ரகுமான் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர் .
அந்த வகையில் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ள இஷா கோபிகர் இப்படம் ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வருகிறது என்றும், இது தமிழ் சினிமாவில் வர போகும் முதல் ஏலியன் படம் எனவும் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர் இந்த படத்திற்காக நான் உட்பட பலரும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வருகிறோம் கட்டாயம் வழிப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம் . அதே சமயம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக இந்த படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் .