பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு..!
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 38-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி உலக புகழ் பெற்ற மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர்.
நடப்பு தொடரில் சில வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் தடுமாறிக் கொண்டிருக்கும் சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி என்று 4 புள்ளியுடன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த இரு அணிகளும் இந்த சீசனில் மோதுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே சந்தித்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது . இதனால் இந்த முறை அந்த தோல்விக்கு பழிதீர்க்க சென்னை அணி கட்டாயம் கடுமையான ஆட்டத்தை வெளிப்டுத்தும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
