அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும். எம்.பி.யுமான ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளி அதாவது எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் இந்த கல்வியாண்டு முதல் நீக்க தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதை மறுபரிசீலிக்க வேண்டும் . மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையில் இந்தியா முழவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் அந்தந்த மாநில மொழிகளில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது . இதனால் ஆங்கில வழியில் மழலையர் கல்வியும் தொடர் மேற் வகுப்பு ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் கல்வி கற்பிப்பது மேல் வகுப்புகளில் மாணவர்கள் கல்வியை புரிந்துகொண்டு எளிதாக கற்பதற்கு வாய்பாக அமையும் .

ஏழை , எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதின் மூலமாக பொருளாதார ரீதியாக பயனடைந்தனர் . எனவே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.