நடிகர் கிருஷ்ணா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்.
தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்ட நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,கிருஷ்ணாகாரு பழம்பெரும் சூப்பர் ஸ்டார். இவர் தன்னுடைய நடிப்பு மற்றும் கலகலப்பான பேச்சு மூலம் எண்ணற்ற மக்களின் இதயங்களை வென்றவர். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்யவியலாத இழப்பாகும் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
