கோயில் சொத்து சார்ந்த ஆவணங்கள் குறிப்பை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழக இந்து அறநிலையத் துறை தெறிவித்துள்ளது. அந்த நவடிக்கையை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் வரவேற்று பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதாவது, “அறநிலையத் துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் – சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கையாக இது அமையும். மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மை அதுவே நல்லாட்சிக்கான முதல் அத்யாயம். நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,அந்த ட்வீட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இருவரையும் அவர் டேக் செய்துள்ளார்.