சோனியாவின் கடிதத்திற்கு …பாஜக பதிலடி
புதுடில்லி: கொரோனாவின் விளைவால் தன் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்ற சோனியாவின் கடிதம் குறித்து, ‘இந்தத் திட்டம் காலாவதியானது மற்றும் காப்பியடிக்கப்பட்டது’ எனறு, பா.ஜ., பதிலடி கொடுத்தது.
சோனியா காந்தி நேற்று மோடிக்கு எழுதிய கடிதத்தில்,’கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர்களை இழந்து குழந்தைகள் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.அக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும்’ எனறு கூறியிருந்தார். மேலும் அக்கடிதத்தில், ‘கொரோனா நோய்த் தொற்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அந்த குழந்தைகளுக்கு வலிமையான ஆரோக்கியமான எதிர்காலத்தை அளிக்க நாடு கடமைப்பட்டிருக்கிறது. கொரோனாவால் பெற்றோர் இருவரையுமோ அல்லது சம்பாதிக்கும் பெற்றோரில் ஒருவரையோ இழந்த குழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகள் மூலம் இலவசக் கல்வி அளிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.
