நம் அன்பிற்கினியவர்களை சூரையாடிய கொரோனா… கண் கலங்கிய மோடி
இந்தியாவில் கொரோனாவின் விஸ்வரூபம் நம்மிடமிருந்து எக்கச்சக்கமானோரை பறித்துவிட்டது,மேலும் நம் நெருக்கமான பல உறவுகளைக் கொண்டு சென்று விட்டது என்று உணர்ச்சிவயப்பட்டு பேசினார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நிலவிவரும் இந்நிலையில், பிரதமர் தனது சொந்த தொகுதியான வாரணாசியின் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் உடன் காணொலி மூலமாக கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து ஆலோசனை நடத்தினார்.
கொரோனா இரண்டாவது அலை (எ) போர்களத்தில் பலவகையான பாதுகாப்பு முறைகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இருப்பினும், இந்த தொற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகளும் அதிக நாட்கள் சிகிச்சை அளிக்கும் மோசமான சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த வைரஸ் நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது. அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.மேலும் கொரோனாவால் தங்களது உறவினர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போரில், கருப்புப் பூஞ்சை என்ற நெருக்கடியும் சேர்ந்துள்ளது. அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது நாம் அலட்சியமாக இருக்கும் தருணமல்ல. நாம் மிக நீண்ட அச்சுறுத்தலை சமாளிக்க நேர்ந்துள்ளோம். குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் நாம் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பு வேலையாக இருக்க வேண்டும்.
நீங்கள் வைரஸைக் கட்டுப்படுத்தியுள்ளீர்கள் ,இதனால் மெத்தனம் ஏற்பட்டு விடக்கூடாது இது ஒரு மிகப்பெரிய போராட்டமாக இருக்கும், என்றார் பிரதமர் மோடி.
மேலும் அவர் வாக்சின்களை விரயம் செய்யக் கூடாது ,ஒரு சிங்கிள் டோஸ் வாக்சினை விரயம் செய்தாலும்,தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய சிகிச்சை பாதிக்கப்படுகிறது என்று பொருள். எனவே வாக்சினை வியாபாரம் செய்வது தேசத்ரோகம் என்றார்,பிரதமர் மோடி.
