ஏன் இப்படி செய்தாங்க! எல்லாம் போச்சு…புலம்பும் மக்கள்!
கொரோன பெருந்தொற்றை எப்படி சமாளிப்பது என்று தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.திமுக தலைமையிலான அரசுக்கு இது பெரிய சவாலாக இருந்தாலும் எப்படியும் கொரோனாவை ஒழித்தே தீர வேண்டும் என மிக மும்முரமாக செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நிலைமை இப்படியிருக்க, ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற நாள் முதல் மிக தீவிரமாக செயல்பட்டு வருவது மட்டுமல்லாமல் பல அரசாணைகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வந்தார். ஆனால் நேற்று ஒரே நாளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக மக்கள் அனைவரும் கொரோனா பயம் இல்லாமல் அடித்து பிடித்து காய் கறி வாங்க கும்பல் சேர்ந்தனர். இதன் மூலம் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளது. இன்னும் சொல்லப்போனால் அடுத்த வாரம் முதல் சில நாட்களுக்கு தினமும் 50 ஆயிரம் பேருக்கு தினமும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என ரிப்போர்ட் வரும் என்றே எதிர்பார்க்கலாம்.

இதன் காரணமாக, தற்போது மக்கள் சமூக வலைத்தளங்களில் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். இத்தனை நாள் ஊரடங்கு இருந்தது பயன் இல்லாமல் போய் விட்டது என்று சொல்லி புலம்ப தொடங்கி உள்ளனர்
