சினிமா

தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட் …! விஜய்யுடன் இணையப்போகும் பிரம்மாண்ட கூட்டணி யார் தெரியுமா …?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய் நடிப்பில் அண்ணாத்த மற்றும் தளபதி 65 படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன .

அண்மையில் அண்ணாத்த படத்திருக்கான தன்னுடைய படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினி .மேலும் கொரோனா ஊரடங்கு முடிந்தால் படம் எப்பொழுது ரிலீசாகும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 65 படத்தில் திடீரென செட் போடும் பணியை நிறுத்த விஜய் கூறியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் செட் போடும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த பணியை உடனடியாக நிறுத்தும்படியும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகு செட் போட்டுக் கொள்ளலாம் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது .

பொதுவாகவே தளபதி விஜய் ஒரு படம் நடித்து கொண்டிருக்கும் போதே அடுத்த படம் குறித்த வேலைகளில் ஈடுபடுவார் என்பது அனைவருக்கும் தெரியும் .இந்நிலையில் விஜய்யின் 67வது படம் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ’தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இந்த படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் தமிழில் மட்டுமின்றி நேரடியாக தெலுங்கிலும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிடும் திட்டம் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றன.