அரசியல்தமிழ்நாடு

கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்த பேசியது மற்றவர்களைப் புண்படுத்திவிட்டது: அமைச்சர் நாசர்

கிறிஸ்தவர்களின் உற்சாகத்திற்காக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது என்றும், தான் திட்டமிட்டு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று பேசவில்லை என்றும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் உள்ள அற்புத ஜெபகோபுரம் தேவாலயத்தின் 40 ஆம் ஆண்டு துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியது கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதென்றும் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதாகவும் பேசியிருந்தார்.

அமைச்சர் நாசரின் இந்த பேச்சு திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மற்ற மத்தைச் சேர்ந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தான் பேசியது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

எந்த நிகழ்ச்சிக்கு செல்கிறோமோ அந்த இடத்தில் கூடியிருக்கும் சம்பந்தப்பட்ட மக்களைச் சந்தோஷப்படுத்தும்படி பேசுவதுதான் ஒரு பேச்சாளரின் இலக்காக இருக்கும் என்றும் அதன் அடிப்படையில்தான் பேசிவிட்டதாகவும் கூறியுள்ளார். கிறிஸ்தவர்களின் நிகழ்ச்சி என்பதால் கூடியிருந்தவர்கள் அனைவரும், கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக சில விஷயங்களை பேசியதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள், மதங்கள் இருந்தாலும், ஒவ்வொரு மதத்தவரும் தங்களுக்குள் வேற்றுமை இல்லாமல்தான் பழகி வருகின்றனர். மத ரீதியில் பிளவுபடுத்த முடியாது என்பதையே தான் குறிப்பிட்டதாகவும் அவர் பேசினார்.

கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால்தான் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கிறிஸ்தவர்களின் உற்சாகத்திற்கு நான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது என்றும் மற்றவர்களை புண்படுத்திவிட்டதாக கூறினார். தான் திட்டமிட்டு சர்ச்சயை ஏற்படுத்த வேண்டும் என்று பேசவில்லை என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.