சினிமா

விக்ரம் பிரபுவின் டாணாகாரன் ட்ரைலர் வெளியீடு..!

நடிகர் திலகம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தற்போது சிறந்த படங்களை கொடுக்க போராடி வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. சிவாஜியின் பேரன் என்ற முறையிலும், பிரபுவின் மகன் என்ற முறையிலும் இவரின் மீது எதிர்பார்ப்புகள் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது.

கும்கி தந்த பிளாக் பஸ்டர் வெற்றி நிச்சயம் இவர் ஒரு பெரிய வலம் வருவார் தமிழ் சினிமாவில் என சொல்ல வைத்தது. ஆனால், ஒரு சில தொடர் தோல்வி படங்கள் அவரை நிலை குலைய வைத்தன.

வெள்ளைக்கார துரை, வானம் கொட்ட டும், அரிமா நம்பி ஆகிய ஹிட் படங்களை அவர் கொடுத்து இருந்தாலும். பல படங்கள் அவருக்கு தோல்வியே தந்தன. ஆனாலும் விடாமல் நடிப்பை வெறிகொண்டு மெருகேற்றி வருகிறார் விக்ரம் பிரபு.

காவல் துறையின் பயிற்சி பட்டறையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது டாணாகாரன் திரை படம். தமிழ் இயக்கத்தில், ஜிப்ரான் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படம் ஹாட் ஸ்டார் இல் ஏப்ரல் 8 ஆம் தேதி 4 மொழிகளில் வெளியாகிறது.