மத்தியில் ஆட்சி மாற்றம் ..பா.சிதம்பரத்தின் ஐடியா
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, ஒன்றாக செயல்பட்டு வந்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி என, முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது. திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சியால், வெற்றி கிடைத்துள்ளது. மத்திய அரசின் பணம் மற்றும் அதிகார பலம், தேர்தல் கமிஷனின் நிலை பிரண்ட நடவடிக்கை என, அனைத்தையும் தாண்டி, மிகப்பெரிய வெற்றி பெற்ற மம்தாவிற்கு எனது பாராட்டுக்கள்.தேர்தல் கமிஷனை சீரமைக்க வேண்டும். தலைமை தேர்தல் கமிஷனராக சிறந்த அதிகாரிகள் வர வேண்டும்.
காங் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் பா.ஜ.கவை வெற்றியடைய செய்த நான்கு தொகுதி மக்களும், விரைவில் வருத்தப்படுவார்கள். நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்தவர்களின் எதிர்காலம் குறித்து கவலையாக இருக்கிறது. அவர்களை அடையாளம் கண்டு, எங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வேன்.
கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வது குறித்து, 11 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். இந்த கட்சிகள் எல்லாம் தொடர்ந்து ஒன்றாக செயல்பட்டால் மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என சிதம்பரம் கூறினார்.
