Covid19இந்தியா

2 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்புகள்…

இந்தியாவில் கொரோனாவால் ஒரேநாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்தை தாண்டியது. மேலும் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 448 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலி எண்ணிக்கை மட்டும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1 கோடியே 66 லட்சத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.