நாசுக்காக திமுகவை சாடிய நடிகர் கவுண்டமணி
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வென்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வரும் மே 7ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது திமுக.
இந்த நிலையில் பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் , நடிகர்கள் என பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே வரிசையில் நேற்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திமுக குறித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார், அதில் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் முன்பு செய்த தவறுகளை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன் என ட்வீட் செய்திருந்தார். நடிகர் கவுண்டமணி எதை குறிப்பிட்டு இப்படி சொல்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. ஒருபுறம் உண்மையை உரக்கச் சொன்னீர்கள் என்று ஆதரவு குரலும் கிளம்பியுள்ளது, மறுபுறம் திமுக அப்படி என்ன தவறு செய்துவிட்டது கடந்தகாலங்களில் என்று கேள்வியும் எழுந்துள்ளது.
