அரசியல்இந்தியாதமிழ்நாடு

ஆணவமும், அகங்காரமுமே பாஜகவின் தோல்விக்கு காரணம்…சிவசேனா விமர்சனம்

மேற்குவங்கத்தில் பா.ஜ.கவின் ஆணவம்தான் தோல்வி அடைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும் என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது. எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க 77 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த நிலையில் பா.ஜ.கவின் தோல்வி குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, மேற்கு வங்கத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று பா.ஜ.கவின் அகங்காரம், ஆணவம்தான் மஹாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்து இறங்கியதற்கு கூட அந்தக் கட்சியின் சகிப்பின்மைப் போக்குதான் காரணம்.

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தோல்வியால் விரக்தி அடைந்த பா.ஜ.கவால் மஹாராஷ்டிராவில் பந்தர்பூர் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியைக் கொண்டாட மனதில்லை. பந்தர்பூர் சட்டசபைத் தேர்தலில் மகாவிகாஸ் அகாதியின் வேட்பாளர் தோற்றுவிட்டார். இருப்பினும் மகாவிகாஸ் அகாதியைச் சேர்ந்த அனைவரும் பா.ஜ.கவுக்கு வாழ்த்துக் கூறினோம், வெற்றியாளருக்கு வாழ்த்துக் கூறினார்கள் என்று சிவேசனா நாளேடில் தெரிவித்துள்ளது.மேற்குவங்கத்தில் பா.ஜ.கவின் ஆணவம்தான் தோல்வி அடைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும் என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.