கேரளாவிலிருந்து கோவைக்கு ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் டுவிட்டரில் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை
கேரளாவிலிருந்து கோவைக்கு ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவிலிருந்து கோவைக்கு ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின், கேரளாவிலிருந்து ஆக்சிஜன் கொண்டுவர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
