சினிமா

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய நடிகர் விஷால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றவர் .

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. ‘அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன்’ என்ற கதை கருவில் இப்படம் தயாராக இருப்பதாக பட குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .