தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிக்கும் பணி தீவிரம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் சில தினங்களில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதி மன்றம் மூலம் அனுமதி வழங்கியது. இதற்காக 24 மெகாவாட் மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. மேலும் இதற்காக 250 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அங்கு சென்று ஆய்வுகள் மேற்க்கொண்டது. ஆய்வின் முடிவில் தினமும் 24 மெகாவாட் மின்சாரம் வழங்கவும், 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கவும் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அங்கு வேலைக்கு வருவோர் ஷிப்டு முறையில் பணி செய்வதற்காக சுமார் 250 பேர் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கான மெஷின்கள் மற்றும் இயந்திரங்கள் சரி செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.