Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,059 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 364 பேர் உயிரிழந்து உள்ளனர். 21,362 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 60,463 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,059 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 12 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 33,047 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,64,350 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,54,33,956 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 18,718 பேர் ஆண்கள், 14,341 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,93,980 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,70,332 ஆகவும் அதிகரித்து உள்ளது. 21,362 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்தது.

364 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 172 பேர் தனியார் மருத்துவமனையிலும், 192 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,369 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.