போட்டி போட்டுக்கொண்டு உருவாகும் நோய்கள்… மக்கள் பலியாகும் அவலம்…கருப்பு பூஞ்சை
இந்தியாவில் மியூகோர்மைகோசிஸ் என்னும் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சிகிச்சைக்கும் மருந்துக்கும் பற்றாக்குறை நிலவிவருகிறது.
கருப்பு பூஞ்சை’ என்று அழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூற்று. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் ‘கருப்புபூஞ்சை’ நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டு கூறியுள்ளன்ர். இந்த நோய் முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய், புற்றுநோயாளிகள், அதிக ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை மட்டுமே தாக்கி வந்த நிலையில் இருந்து வந்த கருப்பு பூஞ்சை நோய், தற்போது தீீவிரமான கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களையும் நோயாளிகளையும் தாக்கி வருகின்ற்து என்கின்றனர் மருத்துவர்கள்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுவதாகவும், இதனால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் மட்டும் இந்த கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை எட்டிப் பார்த்துள்ளதாகக் வருத்த தகவல்கள் கூறப்படுகின்றன.
கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை மருந்தாக “ஆம்போடெரிசின் பி” பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. நாடு முழுவதும் பல பகுதிகளில் ‘ஆம்போடெரிசின் பி’ மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவீர், போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த வேளையில் தற்போது கருப்பு பூஞ்சை தொற்றுக்கான ‘ஆம்போடெரிசின் பி’ மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது மக்களை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியது.
