கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய உள்ளதாக ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வௌியிட்ட அறிக்கையில்: கொரோனாவின் 2வது பேரலையில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை நிலவுகிற்து. இதனை புரிந்து, குழந்தைகளின் நலன் கருதி, ஒவ்வொரு குழந்தைகளின் பெயரிலும் ரூ.10 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக செலுத்த உள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெறிவித்துள்ளார். இதற்கான பணிகளை உடனடியாக செயல்படுத்தும்படி முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.