கொரோனாவால் திமுக எம்.எல்.ஏக்களுக்கு ஆபத்து… பிரபல ஜோதிடர் போட்ட குண்டு
கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்துள்ளதால் 5 தொகுதியில் உள்ள எம்.எல்.ஏகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இடைத்தேர்தல் வரும் கிரகநிலை உள்ளதாக பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சத்குரு சாந்தகுமார். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் அவரது மரணம் சம்பவிக்கும் என கணித்திருந்தார். இதே போன்று ரஜினி பூமியை வாங்கலாம் ஆனால் பூமியை ஆள முடியாது, அவர் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது ஜாதகத்தை கணித்து அவர் கூறியது போன்றே நடந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அப்போது அவரது கணவர் ஸ்டாலின் ஜாதகத்தை கணித்த ஜோசியர் சாந்தகுமாரை நேரில் சந்தித்து மு.க ஸ்டாலின் குறைந்தபட்சம் 165 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என கூறியிருந்தார்.அப்போது அந்த காட்சியை ஒருவர் செல்போனில் படம்பிடித்த போது கோவில் மணி இருபத்தைந்து முறை அடித்துள்ளது.இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே போல் திமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்து ஸ்டாலின் முதல்வராக பதவியும் ஏற்றார்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் சந்திராஷ்டமம் என்பதால் இனிவரும் காலங்களில் அவரது ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் திமுகவை சேர்ந்த ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கொரோனா காலகட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் என்று தற்போது தெரிவித்துள்ளார். இதற்கு பரிகாரம் ஒன்றும் இல்லாவிட்டாலும் கொரோனா காலகட்டங்களில் திமுக எம்எல்ஏக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
